உங்கள் உரிமைகள
சிறுவர் உரிமை பற்றிய ஐ.நா பிரகடனம்
நிபந்தனை-1
18 வயதுக்குட்பட்ட சகலருக்கும் இந்த உரிமைகள் உண்டு
நிபந்தனை-2
பாகுபாடுகளுக்கு எதிரான பாதுகாப்புகளும் நீங்கள் உரித்துடையவர்கள்
நிபந்தனை-3
உங்களுக்கு சிறந்தவற்றையே பெரியவர்கள் செய்ய வேண்டும்.
நிபந்தனை-4
அரசாங்கத்தால் உங்களது உரிமைகள் நிஜமாக்கப்பட வேண்டும் என்று கோருரும் உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-5
உங்களது பெற்றோர்களாலும் குடும்பத்தாலும் வழிகாட்டப்பட வேண்டிய உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-6
வாழ்வதற்கு உங்களுக்கு உரிமையுண்டு
நிபந்தனை-7
உங்களுக்கென ஒரு பெயருக்கும் தேசிய அந்தஸ்;துக்கும் நீங்கள் உரித்துடையவர்கள்
நிபந்தனை-8
உங்களுக்கென ஒரு அடையாளத்தைக் கோரும் உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-9
உங்களுக்குத் தீங்கு விளையாத பட்சத்தில் உங்களது பொற்றோர்களுடன் வாழும் உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-10
நீங்களும் உங்கள் பொற்றோர்களும் வௌ;வேறு நாடுகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டால், அவர்களுடன் சேர்ந்து வாழும் உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-11
நீஙகள் கடத்தப்படக் கூடாது.
நிபந்தனை-12
உங்களது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறுவதற்கும் அக்கருத்துக்கள் செவிமடுக்கப்படுவதுடன் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமெனகோரும் உரிமை உண்டு.
நிபந்தனை-13
மற்றவர்களின் உரிமை பாதிக்கப்படாத வண்ணம், உங்கள் கருத்துக்களை சித்திரம், எழுத்து, பேச்சு ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தும் உரிமை உங்களுக்கு உண்டு
நிபந்தனை-14
நீங்கள் விரும்பியதை நினைக்கவும் உங்கள் பெற்Nhறரின் வழிகாட்டலின்படி நீங்கள் விரும்பும்
மதத்தைப் பின்பற்றவும் உங்களுக்கு உரிமை உண்டு.
நிபந்தனை-15
மற்றவர்களின் உரிமை பாதிக்கப்படாத பட்டசத்தில் உங்களது நண்பர்களுடன் சேர்ந்து பழகவும் சங்கங்கள் அமைக்கவும் உங்களுக்கு உரிமை உண்டு.
நிபந்தனை-16
உங்களுக்கென ஒரு தனியான வாழ்க்கையை வாழவும் உங்களுக்கென்ற அந்தரங்கக் குறிப்புகள் மற்றோர் பார்க்கக்கூடாது என்று உறுதியாக நிற்பதற்கும் உரிமை உண்டு
நிபந்தனை-17
ஊடகங்களில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் உரிமை உங்களுக்குண்டு
நிபந்தனை-18
இயலுமானவரை உங்களது பெற்றோர்களாலேயே நீங்கள் வளர்க்கப்பட வேண்டும் என்ற உரிமை உங்களுக்கு உண்டு
நிபந்தனை-19
பாதிப்புக்குள்ளாகாமல் காப்பாற்றப்பட வேண்டிய உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-20
உங்கள் பெற்றோருடன் வாழ முடியாத இக்கட்டு ஏற்படும் சமயத்தில் உங்களுக்கென விசேட பாதுகாப்புக்கு நீங்கள் உரித்துடையவர்கள்
நிபந்தனை-21
நீங்கள் தத்தெடுக்கப்பட்டிருப்பின் அல்லது வளர்ப்புப் பெற்றோர்களைக் கொண்டிருப்பின் உங்களுக்கான சிறந்தவற்றைப் பெறும் உரிமை உண்டு.
நிபந்தனை-22
நீங்கள் அதிதியாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கென்ற விசேட பாதுகாப்புகளுக்கு நீங்கள் உரித்துடையவர்கள்.
நிபந்தனை-23
நீங்கள் மன ரீதியாகவோ, உளரீதியாகவோ வலது குறைந்தவரெனின் உங்களுக்கென்ற விசேட பாதுகாப்புக்கு நீங்கள் உரித்துடையவர்கள்.
நிபந்தனை-24
உங்களுக்கென்ற சிறந்த சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள் தகவர்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள ப+ரண உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-25
நீங்கள் உங்கள் குடும்பத்தை விட்டு விலகி வசிக்க நேரும் பட்சத்தில் உங்களது நான் பற்றிய கிரமமான பரிசோதிப்புகள் நடாத்தப்பட வேண்டிய உரிமை உங்களுக்குண்டு.
நிபந்தனை-26
நீங்கள் வறியவராக அல்லது கவனிக்கப்பட வேண்டியவராக இருப்பின் அரசாங்கத்தின் உதவிகளைப் பெறும் உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-27
சிறந்த தரமான வாழ்க்கையை வாழும் உரிமை உங்களுக்கு உண்டு
நிபந்தனை-28
கல்வியைப் பெற்றுக் கொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-29
உங்களது அந்தஸ்து மேன்மைப்படுத்தப்படுபவதற்கான கல்வி வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-30
நீங்கள் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவராக இருப்பின் உங்களது மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றைப் பின்பற்றும் உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-31
விளையாட்டுக்கள், இசை, நாடகங்கள் போன்றவற்றின் மூலம் உங்களை இளைப்பாற்றிக் கொள்வதற்கு உங்களுக்கு உரிமையுண்டு
நிபந்தனை-32
உங்களது ஆரோக்கியத்துக்கு அல்லது கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு விடயத்தில் இருந்தும் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-33
அபாயகரமான போதை மருந்துகளில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கான உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-34
பாலியல் து~;பிரயோகங்களில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-35
உங்களை யாரும் கடத்தவோ, விற்பதற்கோ உரிமையில்லை.
நிபந்தனை-36
மற்றவர்களின் சுயநலத் தேவைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமை ங்களுக்கு உண்டு.
நிபந்தனை-37
கொடூரமான முறையில் அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நீங்கள் தண்டிக்கப்பட முடியாது.
நிபந்தனை-38
யுத்த நேரங்களில் உங்களுக்கான பாதுகாப்புக்கு நீங்கள் உரித்துடையவர்கள் 15 வயதுக்குட்பட்டவராயின் உங்களை யுத்தங்களில் ஈடுபடுத்துவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது.
நிபந்தனை-39
நீங்கள் அவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பங்களின் உங்களுக்கான பாதுகாப்பைக் கோரும் உரிமை உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-40
சட்டவிதிகளை நீங்கள் மீறியதாக குற்றம் சாட்டப்படும் சமயங்களில் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவி கோரக்கூடிய உரிமை உங்களுக்குண்டு.
நிபந்தனை-41
இவற்றைவிட மேலும் சிறந்த உரிமைகளைப் பெறுவதற்கு உங்கள்; நாட்டு சட்டத்தின்படி அல்லது சர்வதேச சட்டத்தின்படி சகல உரிமைகளும் உங்களுக்கு உண்டு.
நிபந்தனை-42
இந்த உரிமைப் பிரகடனத்தைப் பற்றி சகல சிறுவர்களும் வயது வந்தோரும் அறிந்திருக்க வேண்டும்.
நிபந்தனை-43-54
இந்த நிபந்தனைகள், சிறுவர்களுக்கான உரிமைகளை நிலை நாட்டுவதற்காக அரசாங்கங்களும் சர்வதேச நிறுவனங்களும் செயற்பட வேண்டிய வழிவகைகளை தெளிவுபடுத்துகின்றன.