logos
Young People Parents Teachers
young people
 
Communication Centres
O Level Sri Lanka

அனுசரணையாளர்கள்.

Plan Sri Lanka

Plan - ஸ்ரீலங்கா

சிறுவர் நலனை இலக்காகக் கொண்டு இயங்கும் உலகின் மிகப்பெரிய சமுதாய அபிவிருத்தி நிறுவனங்களின் ஒன்றான Plan தற்போது உலகின் 60 நாடுகளில் இயங்கி வருகிறது. இலங்கையில் வறிய, பின்தங்கிய கிராம சமூகங்களுக்கிடையே மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதன்; மூலம் சமூகங்களைச் சார்ந்த சிறுவர்களின் வாழ்வில் நிலையானதொரு அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு Plan அமைப்பு செயற்படுகிறது.

சக மனிதர்களின் உரிமைகளையும், கௌரவத்தையும் மதிக்கும் ஒரு சமுதாயத்திற்குள் வாழும் திக்கற்ற சிறுவர்கள் தமக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயற்படக்கூடிய ஒரு அற்புத உலகை உருவாக்குவது Plan இயக்கத்தின் நோக்கமாகும்.

எமது குறிக்கோள், வளர்முக நாடுகளில் வாழும் வசதியற்ற சிறுவர்களின் வாழ்க்கைத்தரத்தில் நிலையானதொரு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொடுப்பதேயாகும். கலாசார ரீதியில் மக்களை ஒன்றுபடுத்துவதும், அவர்களின் வாழ்க்கையின் அர்த்தத்தையும், பெறுமதியையும் உணரச் செய்வதும் எமது நோக்கமாகும்.

•திக்கற்ற சிறுவர்கள், அவர்களது குடும்பங்கள், சமூகம் ஆகியன தங்களது அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும், சமுதாயத்தில் அவர்களது பங்கேற்றலை மேம்படுத்துவதன் மூலம் அதன் பலாபலன்களை அனுபவிக்கும் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கும் வழிவகுத்தல்.

•வௌ;வேறு நாடுகளைச் சேர்ந்த, வௌ;வேறு கலாசாரங்களை பின்பற்றுபவர்களுக்கும் இடையில் உறவுகளை கட்டியெழுப்பி, அவர்களுக்கிடையிலான புரிந்துணர்வை அதிகரிப்பதன் மூலம் உலக வாழ் சிறுவர்களின் உரிமைகளையும், விருப்புகளையும் மேம்படுத்தல்.

•Plan அமைப்பின், சிறுவர் அபிவிருத்தி பணிகளில் சிறுவர்கள் வெறுமனே உதவிபெறும் ஒருசாராரென்ற தார்ப்பரியத்தியத்திற்கு அப்பால் அவர்களும் அபிவிருத்திப் பணிகளில் பங்குதாரர்கள் என்ற அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

சிறுவர்களை வெறுமனே உதவி பெறுபவர்களாக மட்டும் நோக்காமல் அபிவிருத்திப் பணியில் அவர்களையும் பங்குதாரர்களாக்குவதே Plan அமைப்பின் அணுகுமுறையாகும். பிள்ளைகளுக்கு தகவல்களை பெறக்கூடிய வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதன் மூலமும் அவர்களது கருத்துக்கள் எதிர்ப்பார்ப்புக்கள், அபிப்பிராயங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதன் மூலமும் அச்சிறுவர்களை பாதிக்கும் விடயங்களை; வித்தியாசமான கண்ணேட்டத்தில் எம்மால் நோக்க முடிகிறது.

அவர்களுக்கு எது சிறந்தது என்று எமக்குத் தெரியுமென்ற கோட்பாட்டை விடுத்து அவர்களின் குரல்களுக்கு செவிமடுப்பதன் மூலம் உண்மையான நிலையைப் புரிந்து சேவையாற்றும் வாய்ப்பு எமக்குக் கிடைக்கிறது..

இலங்கையில் பின்தங்கிய சமூகத்தினரிடையே நிலையான அபிவிருத்திகளை உருவாக்கும் பணியில் Plan அமைப்பு கடந்த 25 வருடங்களாக செயற்பட்டு வருகிறது. ஹம்பாந்தோட்டை, மொனராகலை, கண்டி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 22 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 24,000 மேற்பட்ட சிறுவர்களுக்கும், சமூகத்திற்கும் நாம் தொண்டாற்றி வருகிறோம்.

குசுனு நிவாரணங்களுக்கும் அபிவிருத்திக்குமான நிதியம்.


Fund for Relief & Development

Fund for Relief and Development

குசுனு ஒரு சர்வதேச அரசசார்பற்ற நிறுவனம். இலங்கையில் சமூகநலன், பெண்கள் வலுவ+ட்டல் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் நீண்டு நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதுடன் தொடர்பாடல் துறையில் தற்போது இருக்கும்; வலையமைப்பை மேம்படுத்தவும், புதியனவற்றை உருவாக்கவும் முனைந்து செயற்படுகின்றது.

மேற்கூறிய செயற்பாடுகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்காக இந்த நிறுவனம் பின்வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றது.

•தற்போது பாவனையில் இருக்கும் தொடர்பாடல் வலையமைப்புகளுக்கு உதவிபுரிதலும், புதியவற்றை உருவாக்குதலும்.

•சகல ஊடகங்கள் மூலமாகவும் முறைசார் கல்வி நிகழ்ச்சிகளை நடாத்துவதன் மூலம் மனித அபிவிருத்தியை உருவாக்குவதற்கான பயிற்சிகளை அளித்தல்.

•ஆலோசனை சேவைகளை வழங்குவதன் மூலமும் தொடர்பாடல் வசதிகளை விருத்தி செய்வதன் மூலமும், மனித அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன..

 

Young People

Youth
Parents

Parents
Teachers