logos
Young People Parents Teachers
young people
 
Communication Centres
O Level Sri Lanka

சிறுவர்களுக்கான ஊடகங்களின் ஐந்தாவது உலக உச்சி மாநாடு

சிறுவர்களுக்கான ஊடகங்களின் ஐந்தாவது உலக உச்சி மாநாடு 2007 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் ஜொகனர்ஸ்பேர்க் நகரில், சென்டன் என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.

நோக்கமும் எதிர்பார்ப்பும்

அந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர்களின் நோக்கம் சிறுவர்; ஊடகங்கள் சார்ந்த விடயங்களைப் பற்றிக் கலந்தாலோசிக்கவும், விவாதிக்கவும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கான உலகளாவிய ஒன்று கூடலை ஒழுங்கு செய்வதாகும். இதன் மூலம் தெளிவான, நடைமுறைப் படுத்தக்கூடிய நிலையான பலாபலன்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

உச்சி மாநாட்டின் நோக்கம்.

இந்த ஐந்தாவது உச்சி மாநாடு வளர்முக நாடுகளின் அபிவிருத்தியைக் கருத்திற் கொண்டு, உலகளாவிய ரீதியில் சிறுவர்களுக்கான ஊடகங்களின் வேறுபட்ட சூழ்நிலைகளை தெளிவாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் பொதுவான நோக்கம் சிறுவர்களின் ஏகோபித்த குரல்கள் செவிமடுக்கப்படுவதாகும். இந்த மாநாடு விவாதங்களுக்கான ஒரு மேடையையும் கலந்துரையாடல்களுக்கான ஒரு பொது மன்றத்தையும், உள்ளகக் கூட்டத் தொடர்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் மிகச் சிறந்த நடைமுறைகள் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் வழங்குகிறது.

ஆபிரிக்காவின் ஊடகச் சுற்றாடலின் பரிமாணம் இந்த மாநாட்டில் தெளிவாக்கப்படும். எனினும் அது உபுன்துவின் 'நீங்கள் இன்றி நானில்லை|| என்ற தாற்பரியத்தில் தங்கியிருப்பதுடன் உலகத்தின் தேவைகள், நிலவரங்கள், சாத்தியங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.

இன்று ஊடகங்களின் பலதரப்பட்ட தொழில்நுட்பங்கள் சிறுவர்களின் இயற்கையான உத்வேகங்களை வடிவமைத்துக கொள்ளக்கூடிய பல்வேறு வழிகளை உருவாக்கியுள்ளன. இந்தப் புதிய ஊடக வழிமுறைகள், புத்தகங்கள் இசை, வரைபடங்கள், படங்கள், ஒலி, ஒளி நாடாக்கள் போன்ற அபரிதமான எண்ணிக்கையை உள்ளடக்கியுள்ளது. எனவே, இவ்வாறான ஊடகங்களை ஓரிடத்திற்குக் கொண்டு வருவதன் மூலம் கற்கும் அனுபவங்களின் எல்லையை பாரிய அளவு விஸ்தரிப்பதுடன், சமூக இயற்கை உலகங்களைப் பார்வையாளர்கள் பரந்த அளவில் பார்ப்பதற்கும் வழிவகை ஏற்படுகிறது.

இலக்குகளும் நோக்கங்களும்

சிறுவர்களுக்கான ஊடகங்களின் ஐந்தாவது உச்சி மாநாட்டின் இலக்குகளும் நோக்கங்களும், உலக உச்சி மாநாட்டு சம்மேளனம், ஐக்கிய நாடுகளின் மிலேனியம் பிரகடனம், மிலேனியம் அபிவிருத்தி இலக்குகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள முன்னுரிமைகள் ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சாசனம் போன்றவற்றிற்கு இசைவானவை.

பிரதேசத்துக்குள்ளேயும், கண்டங்களுக்கு இடையிலும் உலகளாவிய ரீதியிலும், சிறுவர்கள் சம்பந்தமான செயற்றிட்டங்களை மேம்படுத்த உலக உச்சி மாநாட்டு சம்மேளனத்தின் இலக்குகளுக்கு முகம் கொடுத்தல்.

உலகளாவிய ரீதியில் ஊடகத்துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்கள் சிறுவர் ஊடகத்துறை சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதை வலியுறுத்தல்.

கண்டங்களுக்கிடையேயும், சர்வதேச ரீதியிலும் அவ்வாறான நிகழ்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குதல்.

சிறுவர்கள் சம்பந்தமான எதிர்கால நிகழ்ச்சித் திட்டங்களின் தராதரத்தை மேம்படுத்த ஆலோசனைகளையும் நிபுணத்துவத்தையும் பரிமாறிக் கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தல்.

தென்னாபிரிக்கப் பிரதேசத்தில் மட்டுமன்றி முழு ஆபிரிக்கக் கண்டத்திலும் கவனம் செலுத்துவதற்கான உந்துதலை உச்சி மாநாட்டில் வலியுறுத்தல்.

உலகளாவிய ரீதியில் பிரதிநிதிகள் பங்கேற்பதனால், இந்த மாநாடு சர்வதேச மட்டத்தில் தனது செயற்பாடுகளை விஸ்தரிக்க வேண்டும். அதாவது ஆபிரிக்காவினால் எழுப்பப்படும் இந்தக் குரல் சர்வதேசத்தின் குரலாக கணிக்கப்பட வேண்டும்.

ஊடகத்துறையாவது இளைஞர்களின் சமூக அபிவிருத்தியில் ர்ஐஏஇ யுஐனுளு ஆகியவை சம்பந்தமான விழிப்புணர்வு உட்பட தீவிர பங்களிப்பை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை வலியுத்தல்.

பலதரப்பட்ட ஊடகத்துறைகளிலும் அபிவிருத்திக்கான வாய்ப்புக்களைக் கண்டு பிடித்தலும் வியாபாரங்களுக்கான சாத்தியங்களை உருவாக்குதலும் வலியுறுத்தப்படல்.

விவாதங்கள், கலந்துரையாடல்கள் போன்றவற்றை அமுல்படுத்துவதன் மூலம் சிறுவர் ஊடகத்துறைக்கு சர்வதேச மட்டத்திலான கொள்கைத் திட்டங்களும் வழி நடத்தலும் பற்றிய விரிவான செயற்றிட்டம் ஒன்றை உருவாக்குதல்.

முந்திய உச்சி மாநாடுகளில் நடாத்தப்பட்ட கலந்துரையாடல்கள், தீர்மானங்கள், ஆகியவற்றை மீளாய்வு செய்தலும் முன்னெடுத்துச் செல்லலும்.

 

Young People

Youth
Parents

Parents
Teachers