நாடுகளின் எல்லைகளுக்கும் அப்பாற்பட்டு, ஒரு நிலையங்கள் பிள்ளைக்கு தனது கருத்துக்களை வெளிப்படுத்தவும், ஆலோசனை கூறவும தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் ப+ரண
உரிமையுண்டு (ஐநா வி;ன் சிறுவர் உரிமைப் பிரகடனத்தின் 13வது நிபந்தனை)
இந்த இணையத் தளத்தின் இதயப் பகுதி இதுவே.
இலங்கையின் தென்மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளிலுள்ள தொடர்பாடல் நிலையங்களுடன் இளைய நிருபர்களின் தொடர்பு வலையமைப்பு சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்பாடல் நிலையமொன்று பின்வரும் தொழில்பாடுகளை உள்ளடக்கியது.
•சுவரொட்டிகள் முதல் வானொலி சஞ்சிகைகள் வரை பல்வேறு ஊடகங்கள் வழியாக இளம் நிருபர்கள் தம்மை வெளிப்படுத்திக் கொள்வதற்கான கருவிகளையும் தொடர்பாடல் வழிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல்.
• தொடர்பாடல் பயிற்சி நெறிகளை அமுல்படுத்தும் ஒரு பிரதான மையமாக செயற்படல்.
•இணையத்தள நிகழ்ச்சிகளின் மூலமாக தேவையான தகவல்களைப் பொறுதலும் அவதானித்தலும்.
• புhடசாலை நிருபர்கள் வானொலி சஞ்சிகைகளுக்கும் இணையத்தளங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள வழியேற்படுத்தல்.
சில சந்தர்ப்பங்களில் இந்தத் தொடர்பாடல் நிலையங்கள் குறகியதூரத்துக்கான பரீட்சார்த்த வானொலி ஒலிபரப்புகளாக இயங்கும். உதாரணமாக விளையாட்டு மைதானத்திற்குள் ஒலிபரப்புக் கருவிகள் மூலமும் சுவரொட்டிகள் மூலமும் நடாத்தப்படக்கூடிய வெளிப்பாடுகள். இந்த நிகழ்ச்சிகள் மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து மாணவர்களும் நன்மை பெறுவர்.
இந்தத் தொடர்பாடல் நிலையங்களுக்கு விசேட Tuk Tuk தொலைத் தொடர்பு சேவை கிரமமாகக் கிடைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மடிக்கணனி (Laptop) ஒன்று வாகனத்தின் உள்ளே பொருத்தப்பட்டு மின்கலத்தால் இயங்கும் அச்சு இயந்திரம் (Prineter) புகைப்படக் கருவி (Camera) தொலைபேசி (Telephone) Scanner ஆகியவற்றின் மூலம் ப+ரணமான ஒரு தொலைத் தொடர்பு நிலையம் உருவாக்கப்படுகிறது. CDMA மூலம் கம்பியில்லா தந்தி இணையத்தளமும் பெற்றுத்தரப்படுகிறது. இது நவம்பர் மாத அளவில் உபயோகத்துக்கு வரும்.
இந்தப் பாடசாலை தொடர்பாடல் நிலையங்கள் Plan Sri Lanka வின் உதவியுடன் நடாத்தப்படுகின்றன. இதன் மூலம் உலகெங்கும் உள்ள ஏராளமான ஊடகங்களில் சிறுவர்களின் பங்களிப்பு மேம்படுத்தப்படுகிறது.